புலமைப் பரிசில், உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு!

க.பொ. த உயர்தர பரீட்சைகள், தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது எனத் தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த நாடாளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பரீட்சைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைகளை எப்போது நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply