3 நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசு தீர்மானம்!

அரிசி விலை உயர்வு மற்றும் சந்தையில் அரிசி பற்றாக்குறையை தடுக்கும் நோக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியான்மரில் இருந்து 100,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு மற்றும் அரிசியை இறக்குமதி செய்யும் திகதி பற்றி இன்னும் தீர்மானிக்கபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக சம்பா மற்றும் கிரி சம்பா அரிசி பல்பொருள் அங்காடிகளில் கூட வாங்க முடியாத நிலை காணப்படுகின்றது என நுகர்வோர் குற்றச் சாட்டியுள்ளதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply