திருகோணமலை – தம்புள்ளை வீதி, ஹிரிவடுன்ன பிரதேசத்தில் லொறி, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹபரண பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்தினர் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


