சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண் அதிகாரிகள் மூவர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோரே பிரதி காவல்துறைமா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில், பெண் காவல்துறை அதிகாரிகள் பிரதி காவல்துறைமா அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்டுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.


