வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஈபிஆர் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், இந்தியா தொடர்பிலான இலங்கையின் முடிவுகளில் பல மாற்றங்களை இலங்கை எடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த மாற்றங்கள் ஊடாக தமிழ் மக்கள், சிறுபான்மை இனங்கள் தொடர்பான விடயங்களிலும், யுத்தகாலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் தொடர்பான விடயங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுபான்மையின மக்களின் மனங்களை வெல்லவேண்டும்.
நாங்கள் வடகிழக்கு தமிழ் தேசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தாலும், அரசாங்கம் குறைந்தபட்சம் 13 ஆவது அரசியலமைப்பு சட்டத்தையேனும் இலங்கை அரசாங்கம் முழுமையான அமுல்படுத்தமுன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


