தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஹஹேக பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பஹதேன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்
இதனை, பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது


