ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

ஏ9 வீதியில் கச்சேரிக்கு அருகாமையில் இவ் விபத்து இன்று இடம்பெறுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து, சைக்கிளில் பயணம் செய்த நபர் மீது காரொன்று மோதியதில் இடம்பெறுள்ளது.

மேலும், இவ் விபத்தில் சைக்கிளில் பயணித்த நபருக்கு காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதோடு, சைக்கிளும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எனினும், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள காரில் பயணித்த நபர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்பட்டுள்ளார்.

Leave a Reply