இணுவிலில் நகை கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் கோடரியைக் காட்டி மிரட்டி நகையை கொள்ளையிட்ட ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தாவடியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 03 ஆம் திகதி அதிகாலை 12.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, 21 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டன. சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்து.

அதனடிப்படையில், யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply