டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு வீடுகளுக்குச் சென்று சோதனை

டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு வீடுகளுக்குச் சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு புத்தளம் நகரசபை மற்றும் புத்தளம் சுகாதார காரியாலயம் ஒன்றினைந்து புத்தளம் 5ம் வட்டார பகுதியில் காணப்படுகின்ற வீடுகளுக்குச் சென்று இன்று சோதனைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை டெங்கு நுளம்புகள் உருவாகின்ற நிலையில் காணப்படுகின்ற வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை தாள்களை வழங்கி உரிய காலத்திற்குள் துப்பரவு செய்யுமாறு தெரிவித்துள்ளனர் .

Leave a Reply