தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிப்பு!

<!–

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிப்பு! – Athavan News

வெப்ப சலனம் காரணமாக தென்மேற்கு பருவ காற்று மழை 5 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், குமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply