அடுத்த வாரம் பாடசாலைகளை திறப்பது குறித்து இன்று முடிவு!

அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இவ்வர்று முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை எடுக்கப்படவுள்ளது.

நிலைமைகளை மீளாய்வு செய்து அடுத்த வாரம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கடந்த வாரம் கல்வி அமைச்சு தீர்மானித்தது.

இதேவேளை அனைத்து கிராமப் புறங்களில் உள்ள பாடசாலைகள் சொந்த விருப்பத்தின் பேரில் இயங்குவதற்கும் கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

அத்தோடு நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் சிலவற்றில் ஒன்லைன் மூலம் பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

Leave a Reply