இலங்கையின் போக்குவரத்து துறையை மேம்படுத்த உதவி வழங்கத்தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல், பொருளாதார அதிகாரி திருமதி. சுசான் வோக் இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், நாட்டின் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைச்சகம் தயாராக உள்ளது என அமைச்சர் வன்னியாராச்சி தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக வர்த்தக இணைப்பாளர் லூயிஸ் சலாஸ் மற்றும் போக்குவரத்து அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் காஞ்சனா ஜயரத்ன ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.


