மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பெரும்போக வயல் வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் விவசாயி தனது தோட்ட காணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மோட்டார் குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அந்த விவசாயி வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதையடுத்து, மோட்டார் குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும், இம்மோட்டார் குண்டு யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


