பேராதனை பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவின் இயக்குநர் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ரூ .2.7 மில்லியன் பணத்தினை மோசடி செய்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பேராதெனிய பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கங்களின் வெளிப்புற பிரிவுகளை அமைப்பதற்காக கொடுக்கப்பட பணத்திலேயே இத்தகைய மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு இப் பேராதெனியில் உள்ள மக்கள் வங்கியிலேயே பணம் வைப்பிலிடபட்டுள்ளதாகவும் பணத்தின் நிர்வாக அதிகாரம் உடற்கல்வி இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
உடற்கல்வி இயக்குனரின் கணக்கில் 31 இலட்சம் இருப்பதாகவும் மேலும் 27 இலட்சம் ரூபாயில் பெறுமதியான வீடு வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


