வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூஜையில் மூவருடன் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்று வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து அங்கு தெரிவிக்கையில் ,
இன்று வியாழக்கிழமை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதாரத்துறையினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர் .
அத்தோடு அரச சுற்றறிக்கையில் வழிபாட்டுத்தளங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது .
எனினும் மூவருடன் வழிபாட்டுத்தளங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது இது அரச சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை அத்துடன் இத்தகவல் உண்மைக்குப்புறம்பானது என்பதை தெளிவுபடுத்திய சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் ஆலய வழிபாடுகளில் அதனையும் மீறி ஒன்று கூடினால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்று மேலும் தெரிவித்துள்ளனர் .


