தேயிலை செடிகளுக்கான உரப்பற்றாக்குறையால் உற்பத்தி வீழ்ச்சியடைந்து எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் – ஜோன் செனவிரத்ன
நெல் மற்றும் பிற பயிர்களை சேதன உரத்தைப் பயன்படுத்தி பயிரிடலாம் ஆனால் தேயிலை பயிரினை சேதன உரத்தைப் பயன்படுத்தி செய்ய முடியாது என்று மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல விவாதங்கள் நடந்தாலும், தேயிலை பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தேயிலை பயிர்ச்செய்கைகளுக்கான இரசாயன உரங்களின் பற்றாக்குறையால் கடுமையான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாகவும், உர பிரச்சனை தேயிலை தோட்டங்களை நேரடியாக பாதித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு கிடைக்கின்ற அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக தேயிலை பயிர்ச்செய்கை இருப்பதால் தேயிலை சாகுபடி வீழ்ச்சியடைந்து எதிர்காலத்தில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


