அம்பன்பொல கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் கவயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை அமைதியான முறையில், நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அம்பன்பொல பொலிஸ் பிரிவில், அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனை கண்டித்து மலையகத்தில் சில இடங்களில் கிராம சேவகர்களின் காரியாலயங்களுக்கு முன்பாக கறுப்பு மற்றும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தமையோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, உயிரிழந்த சக உத்தியோகத்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இரத்த வெறியாட்டம் வேண்டாம், அரசே கிராம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய், போன்ற கருத்துகளை போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply