சிறுவர்களை பொது இடங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெயன இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் குறித்த வர்த்தகம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


