திருமணத்தில் கலந்துகொண்ட நூறு பேர் தனிமைப்படுத்தல்!

புத்தளம், முந்தலம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வழிமுறைகளை மீறி திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இத் திருமணம் குறித்து அறிந்ததும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களை எச்சரித்துள்ளனர்.

மேலும், இதில் கலந்து கொண்ட சுமார் 100 பேருடன் மணமக்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணத்தை நடத்த எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply