காணாமற்போன 29 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

கடந்த 2 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்த ரனவன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கட்டுகாஸ்தோட்டை, மகாவலி கங்கையின் கிளை நதியான பிங்கா ஓயாவில் இந்த இளைஞனின் சடலம் மிதந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகாஸ்தோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி பிங்காஓயா ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் அது காணாமற்போன புத்திக ரனவக்க என்ற ரனவன பிரதேச இளைஞரது சடலம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பில், விசாரணைகளை கண்டி நகர திடீர் மரணவிசாரணை அதிகாரி பி.பீ.விஜேகோன் மேற் கொண்டார்.

மேலும், நீரில் மூழ்கியதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply