வெற்று வேலைநிறுத்தத்தை எப்போதுமே ஆதரிக்க மாட்டோம்! முறுத்தெட்டுவே ஆனந்த தேரர்

சுகாதார தொழிற்சங்கத்தினால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் வெற்று வேலைநிறுத்தமாகும் அத்தகைய வெற்று வேலைநிறுத்தத்தை எப்போதுமே ஆதரிக்க மாட்டோம் என பொது சேவை ஐக்கிய செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (08) காலை நாரஹேன்பிட்டிய அபயராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் நிரந்தர இருப்பிற்காகவே இத்தகைய வேலைநிறுத்தங்கள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செவிலியர் சங்கத்தின் பலர் இத்தைய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், அது மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு தடையாக இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply