முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வெளிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்கு டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் இந்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


