இராணுவத்தினரின் 72 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உதவித்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், யாழ். புத்தூரில் அமைந்துள்ள புத்தூர் மடிகே பஞ்சாசீல வித்தியாலயத்தில் கல்விகற்கும் 45 மாணவர்களுக்கு இன்று கற்றல் உபகரணங்களும் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேயர் ஜெனரல் கொடித்துவக்கு மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



