மகிந்தவின் தலையீட்டை எதிர்பார்க்கிறேன்! ஜனாதிபதி

நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தின் உறுப்பினராக இருந்தபோதிலும், தனக்கு தனிப்பட்ட ரீதியில் அரசியல் அனுபவம் குறைவு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், அரசியல் அனுபவம் எனக்கு குறைவு என்பதன் காரணமாக 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலையீடுகளை நான் அதிகளவில் எதிர்பார்க்கிறேன்.

அத்துடன், நான் அரச தலைவராக பதவிக்கு வந்த பின்னர், அரசியல் அனுபவங்களை பெற்று வருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply