இந்திய மீனவர்கள் பிரச்சினை: முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்! – யாழ் மாவட்ட அரச அதிபர்

இலங்கை எல்லைக்குள், இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் செய்வதை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மீனவர்கள் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம், பண்ணை சுற்றுவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பித்து கடற்றொழில் நீரியல் பணிப்பாளர், கடற்றொழில் அமைச்சின் அலுவலகம், இந்திய துணைத் தூதரக அலுவலகம் ஆகியோரிடம் இந்தப் பேரணி நேரில் சென்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாவட்டசெயலகத்தில் மாவட்ட அரச அதிபர் க.மகேசனிடமும் இந்த மகஜர் கையளிக்கப்பட்டு, இதற்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என அப் பேரணி கோரிக்கை விடுத்துள்ளது.

அங்கு யாழ் அரச அதிபர் தெரிவிக்கையில்,

உங்களுடையது நியாயமான கோரிக்கை. ஆகவே, இதை மேல்மட்டத்திற்கு தெரியப்படுத்தி, இதற்குரிய உரிய தரப்பு மற்றும் அமைச்சிடம் தெரியப்பத்துகிறோம்.

அத்துடன், இதில் எங்களுடைய முழு ஒத்துழைப்பையும், அழுத்தத்தையும் நாங்கள் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply