நாங்கள் நாட்டை விட்டு தப்பி ஓடப்போவது இல்லை! – நடேசன்

நாங்கள் நாட்டை விட்டு தப்பி ஓடவும் இல்லை. ஓடப்போவதுவும் இல்லை என முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் நடேசன் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னால் தெரிவித்துள்ளார்.

மேலும், நானும் எனது மனைவியும் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இந்த நாட்டை விட்டு தப்பி ஓடி, வேறு நாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை. அவர் மீதான பனடோரா பத்திரிகையின் குற்றசாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பண்டோரா பத்திரிகையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை அளிக்க அவர் இன்று காலை லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைவாகவே இந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply