கிழக்கில் கல்வித் தரவுகளைக் கொண்ட மென்பொருள் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்!

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாணத்திற்கான கல்வித் தரவுகளைக் கொண்ட மென்பொருள் அமைப்பை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பிலான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், மாகாண கல்வி செயலாளர் கிரிஸ்டிலால் பெர்னாண்டோ, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, ஆளுநரின் உதவி செயலாளர் ஏ.ஜி தேவேந்திரன் மற்றும் உதவி பணிப்பாளர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply