வாழைச்சேனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையுடன், அவரிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீராவோடை கொண்டயன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும், மோட்டார் சைக்கிள்கள் கடந்த சில மாதங்களாக திருடப்பட்டு வந்ததையடுத்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம். ஜயசுந்தரவின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் தொடர்புடைய வேறு யாராவது இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply