கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி அரசாங்கத்தின் 11 கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.
யுகதனவி மின் நிலையம் தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில, இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி வீரசிங்க, எங்கள் மக்கள் கட்சியின் புனித அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் இந்தக் கடிததத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


