இலங்கை இராணுவத்தினரின் 72 ஆவது ஆண்டு நிறைவையொட்டி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், பளை – இந்திராபுரம் பகுதியில் வசித்துவந்த வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரால் வீடு புதிதாக அமைக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேயர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் 55 ஆவது காலாட் பிரிவின் கட்டளைத்தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.


