யாழ்ப்பாபாணம், ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவரை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் பொலிஸாரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாதிக்கப்பட்டவர்கள் இதனை தெரிவித்தனர்.
ஏழாலையில் கடந்த 04 ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கினர். தாக்குதல் மேற்கொண்டவர்களை சிலர் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


