திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர், ஆறு உழவு இயந்திரங்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த ஆறு பேரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்போபுர சீனி அலை மூன்றாவது வலயத்தில், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போது, சூரியபுர விசேட அதிரடிப்படையினரால் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியபுர விசேட பொலிசாரும் அக்போபுர பொலிசாரும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


