யாழ். பல்கலையில் ஒக்ரோபர் 11 முதல் கொரோனாத் தடுப்பூசி!

20 தொடக்கம் 29 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் அல்லது கல்விசாரா ஊழியர்களுக்கான சினோபாம் தடுப்பூசி யாழ் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள எந்தவொரு அரச பல்கலைக்கழகத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள், பணிபுரியும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள்; தமது பல்கலைக்கழக அடையாள அட்டையை சமர்ப்பித்து யாழ் பல்கலைக்கழகத்தில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு, யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தடுப்பூசி வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள், பல்கலைக்கழக தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியைப் பாதுகாப்பாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply