ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து தகவல்களும் கிடைத்தும் சர்வக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்யாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் சர்வக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளமை நகைப்புக்குரியது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு டீல் அரசியலில் ஈடுப்படுபவர்களுக்கு பதிலளிக்க தயாராகவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி தெரிவித்தார்.
அத்தோடு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


