வவுனியாவில் யானை முத்துக்களுடன் மூவரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல் மாகாவ மற்றும் நிக்கவரெட்டிய பிரதேசங்களை சேர்ந்த 53, 30, 29 வயதுடையவர்கள் ஆகும்.
முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய வவுனியா நகரில் யானை முத்துக்களை விற்பனை செய்யும் நோக்குடன் வந்த மூவரை கைது செய்தமையுடன் அவர்களிடமிருந்து நான்கு யானை முத்துக்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட யானை முத்துக்கள் நான்கும் வவுனியா பொலிஸாரிடம் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


