நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநிறுத்தப்பட்ட விசேட கொடுப்பனவு ரூபா 7500 இனை தொடர்ந்து வழங்கக் கோரியும், சீருடை கொடுப்பனவை அதிகரித்து வழங்கக் கோரியும், ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் குறித்த போராட்டத்தை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



