சுன்னாகத்தில் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது!

சுன்னாக பொலிஸ் பிரிவில் இணுவில் பகுதியில் கடந்த வாரம் வீட்டு உரிமையாளரை மிரட்டி 21 பவுண் நகை திருடிசென்ற மூவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து நகை மீட்டுள்ளமையோடு, திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணையில் இருந்தபோது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்தவரிடம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது திருடிய நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply