தபால் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பணிபுரிய வேண்டும் என தாபல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அந்த மூன்று நாட்களில் சனிக்கிழமையை உள்ளடக்குமாறு கோரி புத்தளம் மாவட்ட தபால் நிலைய ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தபால் திணைக்களப் பணிகளை மட்டுப்படுத்த அந்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், தபால் ஊழியர்கள் வாரத்தில் செவ்வாய் , புதன் மற்றும் வியாழக்கிரமைகளில் மாத்திரம் பணியாற்ற வேண்டும் என தபால் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமக்கு வழங்கப்பட்ட மூன்று நாட்களில் சனிக்கிழமையையும் உள்ளடக்குமாறு கோரியே புத்தளத்தில் உள்ள தபால் அலுவலக ஊழியர்கள் நேற்று புதன்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தளத்தில் உள்ள 52 உப அஞ்சல் அலுவலகங்களும், 113 அஞ்சல் அலுவலகங்களும் உள்ள போதிலும், அஞ்சல் அலுவலக ஊழியர்களே இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், உப அஞ்சல் அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்பட்ட போதிலும், அங்கு கொடுக்கல் – வாங்கல்கள் மாத்திரமே இடம்பெற்றதுடன் தபால் விநியோக சேவை எவையும் இடம்பெறவில்லை.
இதேவேளை, எரிபொருள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் மாவட்ட சுகாதார ஊழியர்களும் இன்றைய தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்





