மூதூர் – அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதுடைய ஐயூப்கான் இஹ்ஸான் மிதித்து பயணம் செய்யும் றிக்சா வண்டியை தயாரித்துள்ளார்.
தனது சூழலில் கிடைக்கப்பற்ற கழிவுப் பொருட்களை கொண்டு அவர் இவ் றிக்சா வண்டியை தயார்படுத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு ,போக்குவரத்துப் பிரச்சினை என்பவற்றை கருத்தில் கொண்டு பாடசாலைகள் செல்லும் மாணவ மாணவிகள், வைத்தியசாலை, அரச அலுவலகங்களுக்கு தேவைகளுக்காக செல்வதற்கு போக்குவரத்துக்கு வசதியில்லாமல் சிரமப்படுவோரை இவ் றிக்சா வண்டியில் சேவை அடிப்படையில் கட்டணமின்றி இலவசமாக ஏற்றி இறக்கி வருகின்றார்.
இது குறித்து இஹ்ஸான் கருத்துத் தெரிவிக்கும்போது,
எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு இவ் றிக்சா வண்டியை கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரித்துள்ளேன்.
இதன்மூலம் மிதித்து ஓடுவதால் உடலுக்கு உடற்பயிற்சியாகவுள்ளது.நோய்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம்.நான் பாடசாலை மாணவர்கள், நோயாளிகளை ஏற்றிக் கொண்டு றிக்சா வண்டியில் கொண்டு வருகின்றேன்.
இதன் மூலம் புகைகள் வெளியாறாமையால் சூழல் மாசுபடாது.எனது தந்தை 2000 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.அதன்பின் 06 பேர் கொண்ட குடும்பத்தின் முதலாமவர் நான் என்பதால் குடும்பத்தை நானே கொண்டு செல்கின்றேன்.
இளைஞர்களுக்கு நான் சொல்வது இவ்வாறான றிக்சா வண்டிகளை நீங்களும் செய்வீர்களானால் உங்களுக்கு தொழில் கிடைக்கும்.
ஒரு குண்டூசியானாலும் கடையில் காசுகொடுத்து வாங்கும் மன நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.எனது ஆசை நாம் முயற்சி செய்து சந்தைப்படுத்த வேண்டும்.இதன்மூலம் நாம் ஏற்றுமதியாளர்களாக வரமுடியும் என்கிறார்.



பிற செய்திகள்





