
யாழ் நல்லூர் ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகாலை வேளை, எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன்,மீது கண்மூடித்தனமாக வாள்வெட்டு இன்று நடாத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
எரிபொருளுக்காக காத்திருந்த வேளை ,பின்பக்கமாக வந்த இனம் தெரியாத நபர்கள் இருவர் நிஷாந்தன் மீது வாள் வெட்டை நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த நபருக்கு கை ,தலை,முதுகுகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





