இன்றைய ராசிபலன்-09.10.2021

மேஷராசி அன்பர்களே

சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் போராட வேண்டி வரும். விழிப்புடன் கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

ரிஷபராசி அன்பர்களே

உங்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.

மிதுனராசி அன்பர்களே

தேவைக்கேற்ப பணவரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகராசி அன்பர்களே

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரார்த்தனை செய்ய குடும்பத்தினருடன் ஆலயம் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். நன்மை பெருகும் நாள்.

சிம்மராசி அன்பர்களே

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னிராசி அன்பர்களே

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சொத்துவாங்குவது விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாராசி அன்பர்களே

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகராசி அன்பர்களே

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுராசி அன்பர்களே

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

Leave a Reply