காலியில் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல்!

எரிபொருள் வரிசையில் டோக்கன் பெற்ற குழுவினர் எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து வேறு எந்த வாகனத்தையும் எரிபொருள் எடுக்க அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிறுவனம் இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொள்கலனை அனுப்பி வைத்துள்ளது.

இதனையடுத்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அங்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் வந்திருந்தனர்.

எனினும் , டோக்கன் பெற்றவர்கள் எரிபொருள் பெற்ற பின்னர், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ,அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply