இரு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்த தாய் உயிரிழப்பு!

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்த தாய் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது இரு பிள்ளைகளுடன் தாய் வாவியில் குதித்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply