தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படும்! – பயணிகளுக்கு அறிவிப்பு

தற்போதைய நெருக்கடியிலும், தொடருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறும் என தொடருந்து முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனினும், சில தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமத்தின் காரணமாக இன்று நண்பகல் முதல் தொழிங்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply