யாழ் கறுப்பு சந்தையில் 3500 ரூபாய் வரை எகிறிய பெட்ரோல் விலை!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால் வெறிச்சோடி காணப்படுகின்றது.

அதேவேளை யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே டோக்கன் அடிப்படையில் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மத்தியில் சில கள்ளச் சந்தைகளில் பெற்றோலின் விலை 3000-4000ரூபா வரை விற்பனையாகி வருகின்றதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply