அம்பாறை மாவட்ட ஒலுவில், பாலமுனையைச் சேர்ந்த இருவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
எம்.கே.இப்னு அஸார், ஜெமீல் முஹம்மட் ஆகிய இருவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
பொலிஸ் சேவையில் மிக நீண்டகாலமாக சேவையாற்றி வரும் இவ்விருவரும் அம்பாறை, கல்முனை, அக்கரைப்பற்று சம்மாந்துறை, ஹட்டன், தலைமன்னார் மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளனர்.



