வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலையொன்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் பேராசிரியர் காமினி ரணசிங்கவினால் நேற்று பிரதமரிடம் வழங்கப்பட்டது.
இந்த அவலோகிஸ்வரர் போதிசத்துவர் சிலை கிறிஸ்து வருடம் 7, 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகும். அவலோகிஸ்வரர் போதிசத்துவரின் கருணை, தயவு ஆகிய குணங்களை சித்தரிக்கும் வகையில் இச்சிலையின் தோற்றம் அமைந்துள்ளது.
இடது காலை கீழே வைத்து இடது கையை தரையில் வைத்துக் கொண்டு வலது கையில் விதர்க்க முத்திரையை கொண்டதாக இச்சிலை விளங்குகிறது.
இச்சிலையில் காணப்படும் கலை அம்சங்கள் காரணமாக அது உலகப் புகழ் பெற்று விளங்குவதாக பேராசிரியர் கபில ரணசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மத்திய கலாசார நிதியத்தின் நிறுவுனரான கலாநிதி ரோலண்ட் சில்வாவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட சுவரோவியம், வாஸ்து, சிற்ப தொல்பொருளின் நூற்றாண்டை முன்னிட்டு மத்திய கலாசார நிதியத்தினால் அச்சிடப்பட்ட 100 புத்தகங்களை கொண்ட நூல் தொகுதியில் சிவ மூர்த்தி நூலும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


