உரிமையாளர் நான் என்னை யாராலும் கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாது! – டயனா

மழைக்கு ஒதுங்குவதற்காக வீட்டுக்குள் இடமளித்தால் என்னையே வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர் எனவும், சஜித் போன்று நான் பொம்மையாக இருக்க மாட்டேன் என்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்.

வீட்டின் உண்மையான உரித்தைக் கொண்டுள்ள உரிமையாளர் நான் என்பதால் என்னை ஐக்கிய மக்கள் சக்தி இருந்து யாராலும் வெளியேற்றிவிட முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து டயனா கமகே நீக்கப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இந்தக் கட்சி எனது கணவரின் கட்சியே. நானும், கணவரும் இந்தக் கட்சியைக் கொடுத்த காரணத்தினாலேயே எதிர்க்கட்சியில் பலர் இங்கே வந்துள்ளனர்.

மழைக்கு ஒதுங்க வீட்டில் இடம் கொடுத்தால் வீட்டின் திறப்பையே மற்றி, என்னையே வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அவ்வாறு என்னை வெளியேற்றி விட முடியாது.

எனது மனச்சாட்சிக்கு இணங்கவே அரசுக்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்தேன். இதன்படி தொடர்ந்தும் தீர்மானம் எடுப்பேன். சஜித் போன்று நான் பொம்மையாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply