கந்தக்காடு முகாமில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் நால்வர் கைது

கொழும்பு, ஜுலை 02

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில்  அண்மையில் உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட புனர்வாழ்வு நிலையத்தில் பணிபுரியும் இரண்டு இராணுவத்தினர் உள்ளடங்கலாக  விமானப்படையினர் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உயிரிழந்த இளைஞனின் அடையாளம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலை தொடர்பிலான விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply