
சென்னை, ஜுலை 02
தமிழகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு சென்று மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இலங்கை அகதியான ராணி என்ற பெண்ணின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு செல்போனில் கேம் விளையாடி சுற்றித் திரிந்துள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த ராணி தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததுள்ளார்.
இதையடுத்து தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த ஈழத் தமிழர் இளைஞர் நிரோஷன் நஞ்சறுந்தியுள்ளார்.
இதையடுத்து மயக்க நிலையில் இருந்த நிரோஷனை அவரது நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதித்து அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு வரும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் சகோதரி பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





